2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இருமொழி கற்கைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Kogilavani   / 2012 நவம்பர் 30 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2012 ஆம் ஆண்டில் 5 ஆம் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான இரு மொழி கற்கைக்கான விழிப்புணர்வு வழிகாட்டல் கருத்தரங்கும் ஆங்கில பேச்சு பயிற்சி பாசறையும் நேற்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் தொழில்நுட்பவியல் கூடத்தில் இடம்பெற்றது

கல்முனை கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சௌதுல் நஜீமின் வழிகாட்டலில்  ஆங்கில மொழி மூலமான பிரிவிற்குரிய பகுதி தலைவர் எம்.எஸ்.அலிகான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா, பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா, உதவி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட், ஏ.ஏ.கபுர்.எம்.எச்.எம்.அமீன், உயர்தர விஞ்ஞான பகுதித் தலைவர் ஏ.ஆதம்பாவா உட்பட ஆங்கில பிரிவு பாட ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X