2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸ் பிரிவினரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் கலந்துரையாடலும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீதிப்போக்குவரத்து ஏற்பாடுகள், வீதி வாகன தரிப்பிடம், கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகளை இல்லாதொழித்தல், வீதியில் சேரும் குப்பைகளை அகற்றுதல் ஆகியன சம்பந்தமாக இங்கு கலந்துரையாடப்பட்டன.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிரதேச முப்படை பொறுப்பதிகாரிகள், கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X