2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை கல்முனை மாநகர முதல்வர் பார்வை

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

அம்பாறையில் தொடர்ச்சியாக பெய்துவரும் மலைக் காரணமாக பாதிக்கப்பட்ட கல்முனை மாநகர பிரதேசத்தின் பல பகுதிகளை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையிலான  குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு அல் மினன் வீதி, கல்முனை குவாரி வீதி, வட்ட விதான வீதி, மாதவன் வீதி, கல்முனைக்குடி செய்லான் வீதி, புதிய வீதி ஆகியவற்றிலும் அவ்வீதிகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இப்பகுதிகளை பார்வையிட்ட மேற்படி குழுவினர் வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, 2013ஆம் ஆண்டு மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவிருக்கின்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வடிகான்கள்  சிலவற்றை  நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மக்களிடம்  மாநகரமுதல்வர் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தின்போது  மாநகர  ஆணையாளர் ஜே.லியாகத்அலி மற்றும் மாநகர சபை ஊழியர்களும்  கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X