2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆற்றில் மூழ்கி மீனவர் மரணம்

Super User   / 2013 ஜனவரி 07 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருக்கோவில், விநாயகபுரம் மரணகண்டியாற்றின் ஊடாக மங்கமாரி தோட்ட  பிரதேசத்திற்கு பொதுமக்களை தோணியில்இறக்கிவிட்டு திரும்பும் போது தோணி ஆற்றில் கவிழ்ந்;ததில் தோணி ஓட்டியான மீனவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு உயிரிழந்தவர் விநாயகபுரம் 4ஈம் பிரிவு வீரையடி வீதியை சேர்ந்த 55 வயதான நாகமணி செல்வராஜா என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டு திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்டைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X