2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பிரதேச சபை ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடல்

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்களின் வருடாந்த ஒன்று கூடலும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டரங்கில்; நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சகல உத்தியோகத்தர்களும் தங்களது குடும்ப சகிதம் கலந்துகொண்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhட், உப தவிசாளர் ஏ.கலீலுர்றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.ஏ.ஷpப்லி, சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஏ.பி.அச்சிமுஹம்மட், பீ.எம்.மீராமுகைடீன், எம்.ஐ.எம்.றனூஸ், பீ.தியாகரன், செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட ஊழியர்கள் சகலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் சிறந்த பணியாளர்கள் மற்றும் சேவையிலிருந்த ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0

  • Rizwan Tuesday, 08 January 2013 01:56 PM

    அது சரி கலீலூர் ரஹ்மான் என்ன சேவை செய்ததுக்கு அவருக்கு விருது???

    Reply : 0       0

    jaleel Friday, 11 January 2013 05:49 AM

    தம்பி அவர் அண்மையில் திருமணம் செய்தார் அல்லவா... அதுக்குத்தான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X