2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பயிர்கள் அறுவடை விழா

Kogilavani   / 2013 ஜனவரி 23 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பயிர் அறுவடை நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய திணைக்களமானது, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய முருங்கந்தனை, களுகொல்ல, கனகர் கிராமம் ஆகிய பிரதேசங்களில் நிலக்கடலை, சோளம் மற்றும் மலைநாட்டு மரக்கறி பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட முன்மாதிரி துண்ட செய்கை திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட பயிர்களின் அறுவடை நிகழ்வே நேற்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.பி.திசாநாயக்க, விவசாய உத்தியோகத்தர் எம்.ஐ.இஸ்மா லெவ்வை, பாடவிதான உத்தியோகத்தர் என்.எம்.ஆர்.றசூல், வலய விவசாயப் போதனாசிரியர்கள்,  விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு சோளம், கோவா, நிலக்கடலை ஆகியவற்றை அறுவடை செய்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X