2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அட்டாளைச்சேனையில் டெங்கொழிப்பு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


தேசிய டெங்கொழிப்பு வாரத்தையொட்டி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த குழுவினர், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை டெங்கொழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தைச் சேர்ந்த இக்குழுவினர். திடீர் பரிசோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். 

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின்போது, தங்களது வளவுகளை டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்களின் வளவுகளை சுத்தப்படுத்துமாறும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது.

தேசிய டெங்கொழிப்பு வாரத்தையொட்டி அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய நிர்வாகத்துக்குட்பட்ட பிரதேசங்களை 06 வலயங்களாகப் பிரித்து, மேற்படி டெங்கொழிப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 04 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூஸா நக்பர் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கத்துக்களானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



  Comments - 0

  • Amro Thursday, 14 February 2013 09:10 AM

    இது அவனொட விடுதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X