2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் மதத் தலங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Freelancer   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களுக்காக விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X