2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

Freelancer   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதிகளை, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோது இந்த பணிப்புரையை விடுத்தார்.

இதன்போது, வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டவர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளைச் செயற்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் எவரையும் கைவிடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் வெளிப்படைத்தன்மையுடன் இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அதேநேரம், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்த வேண்டும். இதற்கான காணி அடையாளப்படுத்தல் மற்றும் புதிய வீட்டுத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டதுடன், அனர்த்தத்தின் போது சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X