2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தனியார் நிறுவன நிதி மோசடியை கண்டித்து முதலீட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வந்த தனியார் முதலீட்டு நிறுவனமொன்று நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட நிதியை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் முதலீட்டாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசல் முன்பாக ஜூம்மாத் தொழுகையை தொடர்ந்த இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் செர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிறுவனத்தை திறப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜம்யியதுல் உலமா இன்று மௌனமாய் இருப்பது ஏன்?, மோசடிக்காரர்களுக்க எதிராக நடவடிக்கை எடுத்து எங்களின் பணங்களை மீளப் பெற்றுத் தாருங்கள்?, குறித்த நிறுவனம் முஸ்லீம்களின் 860 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தது ஏன்? போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0

  • najeem Friday, 22 February 2013 12:16 PM

    என்ன செய்வது இன்னும் சில முதலீட்டு நிறுவனங்கள் திறபடவுள்ளதாம்... அதிலும் முதலீடு செய்யுங்கள்

    Reply : 0       0

    IBNU ABOO. Monday, 25 February 2013 03:06 PM

    ஹலால் ஹராம் பிரச்சினையும்,விஷ்வரூபம் பிரச்சினையும், இதற்குள் இன்னொரு பிரச்சினையா? இது நம்மை நாமே காட்டிகொடுப்பது அந்நியரிடம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X