2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உலக சுற்றுலா தின நிகழ்வு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி.கே.றஹமதுல்லாஹ்


உலக  சுற்றுலா  தினத்தை முன்னிட்டு  சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம் பொத்துவில் பிரதேச சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த உலக  சுற்றுலா தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பொத்துவில் அருகம்பையில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் ஏ,எம். ஜஹ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித்,  செங்காமம், அறுகம்பை, பொத்துவில் பிரதேச இராணுவ, பொலிஸ்
பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின்போது அறுகம்பை பிரதேசத்தில் உல்லாச பயணிகளுக்கு செவ்விளநீர் வழங்கப்பட்டதுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் நோயாளர்களுக்கு செவ்விளநீர் வழங்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .