2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விசேட சுற்றிவளைப்பில் 689 பேர் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் அவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதுதவிர, பகிரங்க பிடியாணை பிறப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் மது அருந்தி வாகனம் செலுத்திய 100 பேர் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3,635 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .