2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பணிப்புறக்கணிப்பில் குதிக்கும் தபால் ஊழியர்கள்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை மாலை 4.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். 

தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு, நிர்வாக அலுவலகம் மற்றும் கணக்காய்வு அலுவலகங்களில் ஊழியர்களின் பணியை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். 

பின்னர் நாளை நள்ளிரவு 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .