2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நல்லூருக்கு வந்த பஸ்ஸில் திடீர் தீ

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டது. 

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு, நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது சாரதி பேருந்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. 

யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். 

தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .