2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருக்கோவில் பகுதியில் உள்ள விநாயகபுரம் கோரக்களப்பு ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

விநாயகபுரம் 2ஆம் பிரிவு ஆலையடி வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான து.பரஞ்சோதி (வயது 57)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை முற்பகல் 10.50 மணியளவில் மேற்படி ஆற்றில் வலையை வீசி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .