2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு சிரமதானம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
 
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச சபை, நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன சவளக்கடை பொலிஸாருடன் இணைந்து நேற்று சனிக்கிழமை மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை மேற்கொண்டனர்.
 
இதன்போது பிரதேசத்திலுள்ள மயானம், பொது இடங்கள் என்பன துப்பரவு செய்யப்பட்டதுடன், டெங்கு பரவக்கூடிய பொருட்கள் இனங்காணப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
இச்சிரமதான பணியில் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெட்ணம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.பிள்ளையான் தம்பி பொது சுகாதார பரிசோதகர் பி.இளங்கோ உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .