2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காணாமல் போன மோட்டார் சைக்கிள்களில் மூன்று மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

அம்பாறை  மாவட்டத்தின்  கல்முனை  பொலிஸ்  பிரிவில்   காணாமல்  போன   3  மோட்டார்   சைக்கிள்கள்    இன்று   மீட்கப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்   கல்முனை   பொலிஸ்  நிலையத்தின்   பெரும்  குற்றத்தடுப்பு    பொறுப்பதிகாரி   சிவநாதன்   தெரிவித்தார்.

கல்முனை  பொலிஸ்  பிரிவில்   16  மோட்டார்  சைக்கிள்கள்   கடந்த  சிலநாட்களில்   காணாமல்போனதாக  முறைப்பாடு  கிடைத்துள்ளதாகவும்    அவர்   தெரிவித்தார்.

கல்முனை   பொலிஸ்  நிலையத்தின்   தலைமையக  பொலிஸ்  அதிகாரி கபார்   தலைமையிலான  பொலிஸ்  குழுவினர்  இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு  வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .