2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரண்டு மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஜே.எம்.ஹனீபா

 
கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை- 2ஆம் பிரிவிலுள்ள கிணற்றடி வீதி இரண்டு மில்லியன் ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப வைபவம் திங்கட்கிழமை  (11) மாலை இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
 
இதன்போது பத்து இலட்சம் ரூபா செலவில் இவ் வீதியில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தினையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .