2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  68ஆவது பிறந்த தினத்தையொட்டியும், இரண்டாவது முறை பதவியேற்று ஜனாதிபதி  மூன்று வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டும்  மற்றும் இந்துக்களின் கார்த்திகை விளக்கீடு என்பவற்றை கருத்தில்கொண்டு  நற்பிட்டிமுனை இந்து மையானம் சிரமதான மூலம் ஞாயிற்றுக்கிழமை (17) துப்புரவு செய்யப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவு   பரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதான பணியை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான பி.எச்.பியசேன, பிரதேச செயலாளர் கே.லவநாதன் ஆகியோர்கள் ஆரம்பித்து வைத்தனர்.

சிரமதான நடவடிக்கையில், சமுர்த்தி உதவி பெறும் குடும்ப அங்கத்தினர், விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள்உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .