2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தப்பியோடிய சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மீண்டும் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர். 

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பெண் ஒருவரை வல்லுறவு செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்  தொடர்பில் 50 வயதான இந்தச்  சந்தேக நபர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்திருந்த  இந்தச் சந்தேக நபருக்கு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், இந்தச் சந்தேக நபர் வைத்தியசாலையிலிருந்து யன்னல் வழியாக குதித்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவ்வாறு தப்பியோடிய சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .