2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நிறைவடைந்த வேலைத்திடங்கள் மக்களிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் 25 மில்லியன் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை எல்லை கொங்ரீட் வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், அஸ்ஸஹ்றா வித்தியாலத்தின் மூன்று மாடி புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லும் நட்டி வைக்கப்பட்டது.

இப்பாடசாடசாலையின் மூன்று மாடி புதிய கட்டடத்திற்கான 09 மில்லியன் 7பா நிதியை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்திருந்தது. ஜனாதிபதியின் 68ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் புப்ரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை, விமலவீர திஸாநாயக்க, மாநகர முதல்வர் அதஉல்லா அகமட் ஸக்கி, பிரதிக் கல்விப்பணிப்பாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .