2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஊழல்புரியும் உத்தியோக்ஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: நிஸாம் காரியப்பர்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை மாநகர சபையில் ஊழல்புரியும் உத்தியோக்ஸ்தர்கள் என்று யாரும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக ஒரு மணித்தியாலத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

அவரின் மாநகர முதல்வர் பதவியேற்பினை தொடர்ந்து கல்முனை ஹொலிடே பீச் ரிஸோட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகவியாலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 'எனது மாநகர முதல்வர் பதவிக்காலம் எவ்வளவு காலமாக இருப்பினும் எனது முதற்பணியாக இந்த மாநகர முதல்வர் பணியினை மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வேன்' எனக் கூறினார்.

மேலும், 'தான் பதவி வகிக்கும் காலத்தில் நிலைத்திருக்கக்கூடிய திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதனை ஏனைய மாநகரசபை உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்று மசூரா அடிப்படையில் மேற்கொள்ள உள்ளதாகவும்' கூறினார்.

இன்னும் தாம் பதவிவகிக்கும் காலத்தில் கல்முனை மாநகர சபையிள் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் சபை உறுப்பினர்களுடன் மிகவும் இணைந்து செயற்படும் வண்ணம் ஓரங்கிணைப்பை ஏற்படுத்தி பணியாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கதுல்லாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் அரசியல் பிரமுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .