2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திகள் குறித்து மீளாய்வு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவின் 2013 ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன தலைமையில் நேற்று முன்தினம் (19), பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் 18.9 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் சுகாதாரம், மின்சாரம், வீதி, கல்வி, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, தொடர்பாடல் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இவ்வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாக பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்களின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டது.

இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் என்.குணரெட்னம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.கே.அப்துல் சமட், பிரதேச சபை உறுப்பினர் டி.சுதர்சன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .