2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற உத்தரவை மீறிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

அம்பாறை, இங்குரானைப் பிரதேசத்தில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி சண்டையிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.

இந்த நிலையில்,  பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்கள் இருவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும்  தமண பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம்; உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு பிணையில் வெளிவந்து நீதிமன்ற உத்தரவை  மீறி பொலிஸ் நிலையத்துக்கு குறித்த நாளில் சமூகமளிக்காது  இவர்கள் இருவரும் தலைமஇறாகி இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவரையும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த  பொலிஸார்,  நேற்று புதன்கிழமை  நீதிமன்றத்தில்  நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  இதன்போது   இவர்களின் பிணையை இரத்துச் செய்து 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்  உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .