2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அமைப்புகள் பற்றிய விழிப்பூட்டல் செயலமர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


இலங்கையிலுள்ள 14 ஆயிரத்து 24 கிராம சேவகர் பிரிவுகளில் திவிநெகும' அபிவிருத்தி திணைக்களத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் சமூர்த்தி சங்கங்கள், சிறு குழுக்கள் மற்றும் சமூதாய அடிப்படை அமைப்புக்கள் பற்றி விழிப்பூட்டும் செயலமர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டதின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலும் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தல் செயற்திட்டம் சமூர்தி மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியாரின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் தலைமையில் இன்று வியாழக்கிழமை பாலமுனை கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வளவாளர்களாக சமூர்த்தி முகாமையாளர்கள் யூ.கே.நழீம், ஏ.எம். ஹமீட் ஆகியோர் கலந்துகொண்டு திட்டம் பற்றிய விளக்கத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினை ஆரம்பித்தல், அதன் முக்கியத்துவம், குழுச் செயற்பாடுகளினால் கிடைக்கும் நன்மைகள், கிராமிய அபிவிருத்தியில் சமூதாய அடிப்படை அமைப்புக்களால் மேற்கொள்ளக் கூடிய வற்புறுத்தல்கள், பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள், வாழ்வாதார கருத்திட்டங்கள், கடன் வேலைத்திட்டங்கள்(வாழ்வின் எழுச்சி இசுறு நய, றட்டவிறு கடன்கள்) பற்றி தெளிவு படுத்தப்பட்டு வருகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .