2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விழிப்பூட்டல் வீதி நாடகம்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


கிழக்கு மாகாணத்தில் 45 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் 'முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் முக்கியத்துவமும் அறிவூட்டலும்' பெற்றோருக்கான விழிப்பூட்டல் வீதி நாடகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் அங்கமாக இன்று திங்கட்கிழமை காலை அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக வைபவரீதியாக  வீதி நாடகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளுராட்சி, கிராமிய அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலை கல்விப்பணியகம் ஆகியன இணைந்து யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இவ்ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் பிரதம அதிதியாகவும், பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா, அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் பணிப்பாளர் ஏ.எல்.,ப்றாஹிம் மற்றும் பொதுமக்கள் பாலர் பாடசாலை மாணவாகள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .