2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

'சுதந்திரத்தின் உண்மையான பலனை தற்போதே அனுபவிக்கிறோம்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை சுதந்திரம் அடைந்து 67 வருடங்களின் பின்னர் தற்போதே அதன் உண்மையான பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்கவுள்ளனர் என்று  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இலங்கையின் 67ஆவது  சுதந்திரதின நிகழ்வு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் புதன்கிழமை (04) நடைபெற்றது. இங்கு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கையின் சுதந்திரத்தை பெறுவதற்காக மூவினங்களையும் சேர்ந்த எமது தலைவர்கள் இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு உழைத்துள்ளனர். அவர்களை இந்த நாடும் நாட்டு மக்களும் என்றும் மறக்கக்கூடாது.

இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோதிலும், பல்வேறுபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்துவந்துள்ளன. இதனால், எமது நாட்டு மக்கள் சொல்லொண்;ணாத் துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் உள்ளாகி  வந்துள்ளனர்.

கடந்த 30 வருடகால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், மக்கள் போராட்டங்கள் போன்றவற்றினால்; இந்த நாடு அழிவுப்பாதைக்கு செல்லப்பட்டது.

பின்னர், பயங்கரவாதம் அழிக்கப்பட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோதிலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமானமட்டம் உயர்வதற்கான எந்தச் சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்படவில்லை. வருமானம் அதிகரிக்கப்படாதபோதிலும், பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக சாதாரண மக்கள் முதல் அரசாங்க ஊழியர்களும் கடுமமையாக பாதிக்கப்பட்டுவந்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறந்த பல திட்டங்களையும் 100 நாள் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளபோது, அரசாங்க ஊழியர்கள் என்றுமில்லாத சம்பள அதிகரிப்பை பெறவுள்ளனர். மேலும் அத்தியவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பு, எரிபொருளின் விலைக்குறைப்பு என்பனவற்றால் ஏழை மக்களும், அரச ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு இந்த 67ஆவது சுதந்திரதினத்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடுகின்றனர். இதுவே உண்மையான சுதந்திரமாகும்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .