Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
வெளி மாவட்டங்களிலிருந்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு வருகைத் தந்து, 14 நாள்கள் வீடுகளில் சுயத்தனிமைப்படுத்தலிலிருந்த 758 நபர்களில், 374 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், இன்று செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.
நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி அலுவலகததுக்கு உட்பட்ட பகுதிகளில், 74 நபர்களும், கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 41 நபர்களும், கல்முனைத் தெற்கு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 76 நபர்களும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 30 நபர்களும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 12 நபர்களும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 47 நபர்களும் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்;.
அத்துடன், அட்டாளைச்சேனை பகுதிகளில் 45 நபர்களும், அக்கரைப்பற்று பகுதிகளில் 44 நபர்களும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 48 நபர்களும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 71 நபர்களும் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 93 நபர்களும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 12 நபர்களும், சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 165 நபர்களுமாக மொத்தம் 758 நபர்கள் வீடுகளில் சுய தனிமைப்படுத்திளில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை குறித்த சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 374 நபர்கள், திங்கட்கிழமை (06) விடுக்கப்பட்டுள்ளனர் என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago