Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 22 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா
இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையினத்தோரில் 98 சதவீதமானவர்கள் மிகவும் பண்பானவர்களாகவும் நற்குணம் படைத்தவர்களாகவும் உள்ளனர். அவர்களிடம் காணப்பட்ட சிறந்த பண்பினாலேயே, முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது என தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு, பாலத்தடி முன்றலில் புதன்கிழமை (21) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டிலுள்ள பௌத்த மக்களும் சிறுபான்மையின மக்களும் மிகவும் ஒற்றுமையாகவும் சகோதர வாஞ்சையுடனும் வாழ்ந்துவந்த வரலாறுகள் உள்ளன' என்றார்.
'மேலும் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் மற்றும் அரசியல் பிரிவினையை ஏற்படுத்தி, இந்த நாட்டைப் பிரித்துச் சின்னாபின்னாப்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தையும் வளங்களையும் சூறையாடுவதற்கு உலக நாடுகள் முனைப்புடன் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்கு இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஆபத்தான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்துக்கு நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினால், முஸ்லிம்கள் பலமடைந்து விடுவார்கள் என்பதற்காக இஸ்லாத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் யுக்திகளை யூதர்கள் திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றார்கள்.
முஸ்லிம்கள் உலகில் இரண்டாவது இடத்திலுள்ள போதிலும், அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்துவரும் அரபு நாடுகள் உள்ளபோதிலும், எந்தவொரு நாடும் குரல் கொடுப்பதற்கு முன்வருவதில்லை' என்றார்.
இஸ்லாத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பிரிவினைகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களின் கலை, கலாசாரம், வரலாறுகள், புராதன அடையாளங்கள் போன்றவற்றை அழிப்பதற்கான முன்னெடுப்புகள் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதையிட்டு மக்கள் அவாதானமாக இருக்க வேண்டும்' என்றார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago