Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு என்பது ஒரு நபர் படிக்க அல்லது எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை இணைக்கவும், அதிகாரம் அளிக்கும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.
உலகின் மாற்றத்திற்காக எழுத்தறிவை ஊக்குவிக்க வேண்டும். நிலையான மற்றும் அமைதியான சமூகத்துக்கு அடித்தளம் அமைப்பது என்பது இந்தாண்டின் கருப்பொருள் ஆகும்.
1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் எழுத்தறிவு தினம் இன்னாளில் கொண்டாடுவதற்கு வரலாறும் உண்டு.
மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன.
இதையடுத்து, 1965ம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.
இதையடுத்து, 1966ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி நடத்திய யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுவில், எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுகள் செல்லச்செல்ல எழுத்தறிவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.
மொத்தத்தில், உலக நாடுகள் எடுத்த முயற்சிகளால் சர்வதேச அளவில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்து உள்ளது. குறைந்தபட்சம் 15 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் மற்றும் பெண்களின் கல்வியறிவு 86.3 சதவீதமாகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் கல்வியறிவு 90 சதவீதமாகவும் உள்ளது.
அதே சமயம் உலகளவில் பெண்கள் 82.7 சதமாக சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர். இருப்பினும், நாட்டிற்கு நாடு பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன.
அந்டோரா, பின்லாந்து, லிச்டென்ஸ்டென், லக்சம்பர்க், வடகொரியா, நோர்வே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளன.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் எழுத்தறிவின் அவசியத்தை உணர்த்துவதற்காக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மனித உரிமையை நிலைநாட்ட இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சியை எட்டியபோதிலும், எழுத்தறிவு என்பது இன்னும் சவாலாக உள்ளது.
2020ம் ஆண்டி கணக்கெடுப்பின்படி, 763 மில்லியன் இளைஞரகள் அடிப்படை எழுத்தறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். அண்மைக்கால கொவிட் – 19, பருவநிலை மாற்றம், போர் போன்ற சூழல்கள் சவால்களை அதிகப்படுத்துகிறது.
நமது நாட்டை பொறுத்தவரையில்2021 புள்ளிவிபரவியல் தகவல்களின் பிரகாரம் எழுத்தறிவு 93.3 சதவீதமாக இருந்தது. ஆண்களின் எழுத்தறிவு சதவீதம் 94.3 ஆகவும், பெண்களின் எழுத்தறிவு சதவீதம் 92.3 ஆகவும் இருந்தது. ஆகையால் சர்வதேச எழுத்தறிவு தினம் தொனிப்பொருளான “அமைதியான சமூகத்துக்கு அடித்தளம்” அமைப்பதை நாமும் வலியுறுத்துகின்றோம்.
09.09.2024
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025