R.Tharaniya / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பதை அவர்களின் பெற்றோர்களால் அடைய முடியாத இலக்குகளை நோக்கி அவர்களை வழிநடத்துவதை உள்ளடக்குகிறது. ஒருவரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் குழந்தைகள் மூலம் நிறைவேறாதபோது, வெறுப்பு, மாயை, பெருமை, ஆணவம் போன்ற கெட்ட எண்ணங்கள் எழுகின்றன.
குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்தாத போது அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் எழுவதற்கு இதுவே காரணம். நீங்கள் உள்ளே நன்றாக இருந்தால், வெளியேயும் நன்றாக இருப்பீர்கள். உள்ளே அழுக்கு இருந்தால், அழுக்கு வெளியே வரும். எனவே, நாம் செய்ய வேண்டியது இந்த உட்புறத்தை மேம்படுத்துவதாகும்.
எங்களுடைய மாணவர்கள் என்றோ ஒருநாள் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள் என் நல்ல எண்ணத்துடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். அதனால்தான், பலரும் ஆசிரியர்களாகவே இருக்கும் போது, அவர்களிடம் கற்றவர்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். அதனால்தான், ஆசிரியர்கள் பணி அளப்பரியது என்கின்றனர்.
பல நாடுகளில் ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதை வழங்கப்படும். நமது நாட்டை பொறுத்தவரையில் ஒரு சில ஆசிரியர்களின் செயற்பாடுகளால், முகஞ்சுளிக்க வேண்டிய நிலைமை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தல் உட்பட, மாணவர்களைக் கடுமையாகத் தாக்கியும் விடுகின்றனர்.
மாணவர்களைக் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இடமில்லை. எனினும், எதற்காகக் கண்டிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய சேலையை மிதித்துவிட்ட குற்றத்துக்காக, மாணவியின் கன்னத்தைப் பதம் பார்த்த ஆசிரியை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்விடத்தில் ஆசிரியை பாரிய தவறு செய்துள்ளார்.
கடந்த காலங்களில் பாடசாலைகளில் குளப்படிகளைச் செய்துவிட்டால், பிரம்பு முறிய, முறிய அடித்துவிடுவார்கள். தன்னை ஆசிரியர் தண்டித்து விட்டார் என வீட்டில் முறைப்பாடு செய்தால், தாய், தந்தையர் அல்லது இவ்விருவரும், ஏன் குழப்படி செய்தாய், என கேட்டுக் கேட்டுத் தண்டிப்பார்கள்.
எனினும், அவ்வாறான தண்டனையைத் தற்காலத்தில் இருப்பவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஒரு மரத்தைக் கனி கொடுக்க கட்டாயப்படுத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், மரத்திற்குத் தண்ணீர், மருந்து மற்றும் உரம் வழங்கி நன்கு பராமரித்தால், மரம் நன்றாக வளரும். மரம் நன்றாக வளரும் போது, அது பூக்களையும் பழங்களையும் உற்பத்தி செய்கிறது.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுக்குப் பின்பற்ற வேண்டிய முறை இதுதான்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களை வளர்க்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடாது. கற்றுக்கொள்ள வழிகாட்டுதலும் உந்துதலும் கொடுக்க வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த வழியில், குழந்தைகள் சரியான வயதில் கற்றுக் கொள்கிறார்கள்.
வளர்க்கும் போது ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டும். மாணவர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஒழுக்கமாக நடந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
2025.04.10
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago