Janu / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
1978 ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் பதவியேற்பை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆரம்ப வைபவத்தின்போது பொது நல விரும்பிகளின் நிதிசார் பங்களிப்புடன் 237,120 ரூபாய் கொண்ட ஆரம்ப மூலதனத்தினால் ஜனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.
வறுமை ஒழிப்பு, கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி,மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல், நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல், ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளை செய்தல் ஆகியன பிரதான குறிக்கோள்களாகும். .
இவை மட்டுமின்றி, பல்வேறு நோய்களுக்கான மருத்துவ உதவி,மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வறுமை ஒழிப்புத் திட்டம், மஹாபொல புலமைப்பரிசில் திட்டம்,க.பொ.த (உ/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், க.பொ.த (சா/த) விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கு (உ/த) கற்பதற்கான புலமைப் பரிசில் வழங்குதல், மத சீர்திருத்தம் மற்றும் கட்டுமான பணிகளுக்காக மானியங்கள் வழங்குதல், ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் ‘பெரஹெரா’ மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்குதல், தனிநபர்களின் நலனுக்காக ஜனாதிபதி நிதியம் என்ற பெயரில் அரசு வங்கிகள் மற்றும் பொது அறங்காவலர் திணைக்களத்தில் பராமரிக்கப்படும் கணக்குகள், ஜனாதிபதி மற்றும் செயற்குழுவின் விருப்பப்படி வழங்கப்படும் நன்மைகள் என்பன ஜனாதிபதியின் நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும்.
இந்த ஜனாதிபதி நிதியத்துக்கு, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் பொதுமக்கள் நன்கொடைகள் என்பனவே நிதி மூலங்களாக இருந்தன. இந்த நிதியின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ உதவி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஜனாதிபதி நிதியமானது நோய்களுக்கான சிகிச்சைக்கு பணம் வழங்கும் நிறுவனமாக மக்களுக்கு தெரியும். ஆனால் இந்த நிறுவனத்தில் பணம் பெற பல ஆவணங்கள் தேவை. நோயாளியின் வருமானத்தைப் பின்பற்றும் சூத்திரத்தின் மூலம் இந்த நிதி நோயாளிக்கு பணத்தை வழங்குகிறது.
2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பல கோடி ரூபாய், முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க முதற்கோலாசான் நலிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
பல்வேறு அரசாங்கங்களில் 13 அமைச்சர்கள் அந்த நிதியில் இருந்து எந்த இழப்பீடு கிடைக்காமல் பணம் எடுத்துள்ளனர். ஒரு ஏழைக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து இரண்டரை இலட்சம் ரூபாய் கிடைப்பது மிகவும் கடினம். ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்கள் இந்த பணத்தை கூடிய விரைவில் மற்றும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் வழங்குவார்கள். ஆனால், 300 இலட்சம், 100 இலட்சம் போன்ற பணம் இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகளால் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தின் நிதி வளம் கரைந்து போனது. ஒரு ஏழை, இதய அறுவை சிகிச்சைக்கு பணம் பெற நிறைய நேரம் செலவிட்டான். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் வெட்கமே இல்லாதவர்கள் என்பது சரியானதாக இருக்கும்.
2024.12.20
50 minute ago
53 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
53 minute ago
57 minute ago
1 hours ago