Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 09, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 14 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘தை’யுடன் சாமானியர்களுக்கு ‘வலி’யே பிறந்திருக்கிறது
விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வருடாந்தம் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையான தைப் பொங்கல் திருநாள் தமிழர்களால் இன்று (14) அனுஷ்டிக்கப்படுகின்றது. அத்துடன், தமிழர்களின் தை மாதப் பிறப்பாகவும் இந்நாள் அமைந்திருப்பதோடு, சுப காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கும் மாதமாகவும் அமைந்துள்ளது. தமிழர்களுக்கு இன்றுதான் புத்தாண்டு பிறந்திருக்கிறது..
‘தை’ பிறந்தால் ‘வழி’ பிறக்கும் என்று கூறுவார்கள். எனினும், எமது நாட்டில் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது, பலருக்கும் ‘வலி’யே பிறந்திருக்கிறது. எனினும், புதிய அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, விமர்சனங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சி பீடமேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முக்கிய வேலைத்திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை.
எனினும், “தூய்மையான இலங்கை” செயற்றிட்டத்தை முன்னெடுத்து, வாகனங்களில் மேலதிக பாகங்களை அகற்றும் செயற்பாட்டை அதிரடியாக முன்னெடுத்தமையால், பல்வேறான விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்கள் செய்யப்படுகிறது. சாரதி ஒருவர், தன்னுடைய முச்சக்கரவண்டியை ஆத்திரத்தில் தீயிட்டு கொளுத்திவிட்டார்.
“தூய்மையான இலங்கை” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். எனினும், ஒரு தொழிலுடன் இணைந்து தொழில் செய்பவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், இரு பக்கங்களும் பின்பக்கமும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதால் பாதிப்பு இல்லை. எனினும், முன்பக்க அலங்காரங்கள் தேவையில்லாத விபத்துக்களை ஏற்படுத்தும்.
தேவையில்லாத உதிரிபாகங்கள் என இனங்காணப்பட்ட உதிரிபாகங்கள் அப்புறப்படுத்தப்படும் போது, ஏனைய பாகங்களின் விலைகள் அதிகரிக்கும் இதனால், அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். உதிரிபாகங்களை விற்பனை செய்வோர் வர்த்தகமின்றி நடுவீதிக்கு இழுத்து வீசப்படுவார்கள் என்பதே உண்மையாகும்.
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, தேங்காய்க்கும் அதே நிலை, பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கும், புளி ஒரு கிலோகிராம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, மதுபானம் மற்றும் புகைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதற்காக எதிர் குரல் எழுப்ப முடியாது. எனினும், வாகனங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையில் சிறிய ரக வாகனத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்று கனவு கண்டவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டனர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆகையால், சாமான்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
வழமையாக, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை இம்முறையும் பலர் மத்தியில் காணப்பட்டாலும், தை பிறப்புடன் கூடவே வலி அதிகரித்துள்ளது. (14.01.2025)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 minute ago
2 hours ago
3 hours ago