2026 ஜனவரி 10, சனிக்கிழமை

ஐயப்பன் பூஜை ஆரம்பம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 17 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயப்பன் சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் திங்கட்கிழமை (17) அன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள் மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு திங்கட்கிழமை (17) அன்று நடைபெற்றது.

ஆலயத்தில் அதிகாலை இடம்பெற்ற கணபதி ஹோமத்தை தொடர்ந்து , விசேட அபிஷேக ஆராதனை நடைபெற்று, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஐயப்பன் சுவாமி புனித விரத மாலை அணியும் நிகழ்வு நடைபெற்றது. 

48 நாட்கள் விரதத்தின் கலியுக வரதன்,.ஹரிஹரசுதன் ஐயப்ப சுவாமியின் அருள் வேண்டி பல நூற்றுக்கணக்கான பக்தர்களும் ,.சுவாமி மார்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் விரத பூஜை வழிபாடுகள் யாவும் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சுபேஸ்வரன் குரு சுவாமி தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது குருசுவாமியினால் விரதம் அனுஷ்டிக்கும் சுவாமிகளுக்கு புனித மாலை அணிவிக்க பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .