Editorial / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விரத பூஜை வழிபாடுகள், புதன்கிழமை (22)பக்திபூர்வமாக ஆரம்பமானது.
தமிழ் கடவுள் முருகப்பெருமான் , சூரபத்மனை வதம் செய்த இதிகாச கதைகளுடன் தொடர்புடையதாக அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் முக்கிய விரதமாக கந்தசஷ்டி விரதம் காணப்படுகிறது.
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி , விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு சங்கர்ப்பம் செய்யப்பட்டு , தர்ப்பை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இப் பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சிவகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ் ஆலயத்தில் தொடர்ந்து ஆறுநாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருடா வருடம் இடம்பெறும் எதிர்வரும் 27 ம் திகதி திங்கட்கிழமை சூரசம்ஹார நிகழ்வு முறையில் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.








2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago