Editorial / 2022 மார்ச் 30 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
சரித்திர புகழ்பெற்ற நுவரெலியா- சீத்தாஎலியா சீதையம்மன் கோவிலின் அபிவிருத்தி திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
டில்லி சிடி ரோட்டரிக்கழகத்தின் உறுப்பினர்களான ரோட்டேரியன் பிரதீப் ஜெயின், ரோட்டேரியன் அலோக்ஜெயின் மற்றும் ரோட்டேரியன் சென்டீப் வைஸ் ஆகிய மூவர் கொண்ட குழுவினரின் அனுசரணையுடனும் நுவரெலியா ரோட்டரிக்கழகத்தின் ஆதரவுடன் 30 இலட்சம் ரூபாய் செலவில் புதிய அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன் தினம் ( 29) செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை நாட்டில் நிலவும் பட்டனி,பஞ்சம் அசாதாரண சூழ்நிலை நீங்கி சுபீட்சம் ஏற்பட விசேட பூஜையும் நடைபெற்றது.
ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் ,நிர்வாக சபையின் ஆயுட் காப்பாளரும் முன்னாள் நுவரெலியா ரோட்டரிக் கழகத்தின் தலைவருமான வீ.ஆதிமூலம், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
33 minute ago
35 minute ago