R.Tharaniya / 2025 ஜூலை 09 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2005 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் 13 ஆவது உற்சவமான திருவேட்டை உற்சவம் திங்கட்கிழமை (07) அன்று மாலை மிக சிறப்பாக இடம் பெற்றது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திங்கட்கிழமை (07) அன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலயத்திலிருந்து வேட்டைக்காக புறப்பட்ட எம்பெருமான் வழமையான வீதிகள் ஊடாக சென்று வேட்டையாடி வழமையான வீதிகள் ஊடாக மீண்டும் ஆலயத்தை வருகை தந்து பிராயச்சித்த அபிஷேகம் இடம் பெற்று இரவு பூசைகளும் இடம் பெற்றிருந்தது.
இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன் களுக்காக வேடுவ வேடம் அணிந்து வேட்டையாடும் அந்த உற்சவத்தில் கலந்து கொண்டதோடு வீதிகள் எங்கும் எம்பெருமானுக்கு கும்பங்கள் வைத்து மக்கள் வரவேற்று இருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் உடைய 2025 மகோற்சவம் கடந்த மாதம் ஆரம்பமாகி திங்கட்கிழமை(07)அன்று வேட்டை திருவிழாவும் செவ்வாய்கிழமை (08) அன்று சப்பற திருவிழாவும் புதன்கிழமை (09) அன்று தேர்த் திருவிழாவும் வியாழக்கிழமை(10) அன்று தீர்த்த திருவிழாவோடு உற்சவம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.







சண்முகம் தவசீலன்
52 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
01 May 2026