2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெள்ளிக்கிழமை(10) அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகா பாரதக் கதையை மையமாக கொண்டு பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய உற்சவம் 18 தினங்கள் நடைபெறுவது வழக்கமாகும்.  கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றத்துடன் ஆலய உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் உற்சவத்தில் பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் செல்லும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.  நேற்றைய தினம் 9 ஆம் திகதி அர்ஜுனன் தவநிலை செல்லல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாண்டவர்கள், திரௌபதி , கிருஷ்ணன் தேவாதிகள் தீ மிதிப்பில் ஈடுபடும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை(11) அன்று தீக்குளித்து பால் வார்க்கும் பால் பள்ளயம் சடங்குடன் உற்சவம் நிறைவு பெற உள்ளமை சிறப்பம்சமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .