R.Tharaniya / 2025 ஜூலை 09 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புதன்கிழமை (09) அன்று இடம்பெற்றுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் 14 ஆம் திருவிழாவான புதன்கிழமை (09) அன்று தேர்திருவிழா இடம்பெற்றது.
அதிகாலை சிறப்புப் பூஜைகள் முடிவடைந்த பின்னர் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தேரில் ஏறி நாகபூசணி அம்மன் காட்சியளித்தார்.
நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமாக இடம்பெறுவது வழக்கமான ஒன்றாகும். நயினை நாகபூசணி அம்மனைக் காண இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கடல் கடந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையிலே இன்றும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனின் தேர் உலா காட்சியைக் காண திரண்டு வந்தனர்.
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கண்களைக் கவரும் வகையில் அம்பாள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நயினை அம்மனின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025