Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு ஆரையம்பதி செங்குந்தர் வீதி அருள் மிகு ஸ்ரீ திரு நீல கண்ட விநாயகர் ஆலய கன்னி பங்குனி உத்திர மகோற்சவம் கடந்த புதன்கிழமை (2) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
மகோற்சவ பிரதம குரு கிழக்கின் பிரபல சிவாச்சாரியார் கிரியா திலகம் தத்துவ நிதி விபுல மணி சிவ ஸ்ரீ சண் முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் கிரியைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .
சாதகாசிரியராக சிவ ஸ்ரீ நித்திய ரூபன் குருக்கள் ஈடுபடுகிறார். தொடர்ச்சியாக 10 தினங்கள் திரு விழாக்கள் இடம் பெற்று பத்தாம் திகதி வியாழக்கிழமை தேரோட்டம் இடம்பெறும். மறுநாள் 11ஆம்திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற இருக்கின்றது.
400 வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் முதலாவது கும்பாபிஷேகம் கடந்த வருடம் பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்று, இந்த வருடம்முதன்முதலில் கொடியேற்றத்துடன் முதலாவது மகோற்சவம் தற்போது இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
48 minute ago
1 hours ago