Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மே 24 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு பெருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகின்றது.
இச்சடங்குப்பெருவிழா தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று ஜுன் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும் எனஆலய தர்மகத்தாக்களுள் ஒருவரும் பிரதம பொறியியலாளருமான பரமலிங்கம் இராஜமோகன் தெரிவித்தார்.
30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
05ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள்(6) செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும். எட்டாம்சடங்கு 12ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
வி.ரி. சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
3 hours ago