Janu / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்ற திருப்பாவை பூஜை நிகழ்வு இம்முறையும் மிகவும் சிறப்புற நடைபெற்று வருகின்றன.
இந்த திருப்பாப்பூஜை நிகழ்வு மார்கழி 16 ஆம் திகதி அதிகாலை ஆரம்பமாகியதுடன் இது எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளது.
இக்காலத்தில் தினமும் சிறப்பு திருப்பாப்பூஜைகள் இடம்பெறும் என தெரியவந்துள்ளது.
30 நாட்களும் 30 குடும்பங்கள் முன்னின்று இப்பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி வேளையில் சுப்ரபாதத்தோடு ஆரம்பமாகி தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டு, கண்ணன் பஜனை குழுவினரின் பஜனையோடு, திருப்பாவை பாடல்களும் பாடப்பட்டு பின் பூசை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். இப்பூஜை நிகழ்வுகளில் அப்பகுதி மகா விஷ்ணு பக்தர்கள் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
வ.சக்தி

29 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
52 minute ago
1 hours ago