2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சத்தய சாய்பாபாவின் 94வது அவதார நாள் இன்று

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 23 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சத்தயசாய்பாபா அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் 1200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்படுகின்றன. இன்று (நவ., 23) சாய்பாபாவின் 94வது அவதார நாள் கொண்டாடப்படுகிறது.

1926 நவம்பர் 23ஆம் திகதி  ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கப்ப ராஜு  - ஈஸ்வரம்மா தம்பதியின் மகனாக சாய்பாபா அவதரித்தார். பெற்றோர் வைத்த பெயர் சத்யநாராயண ராஜு.

இவர், 1940 அக்டோபர்  20ஆம் திகதி  சத்யநாராயண ராஜு 14வது வயதில் தன் பெயர் 'சாய்பாபா' என்றும் தான் ஷிரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்றும் பக்தர்களிடம் அறிவித்தார். அந்த நாள் 'அவதாரஅறிவிப்பு தினம்' என கொண்டாடப்படுகிறது.

1950 நவம்பர் 23ஆம் திகதி புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலைய ஆசிரமத்தை தன் 24ஆவது பிறந்த நாளில் திறந்து வைத்தார். ஆண்டு தோறும் நவம்பர் 23ஆம் திகதி சாய்பாபா அவதார தினமும் ஏப்பிரல் 24 அன்று மகா சமாதி தினமும் கொண்டாடப்படுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .