2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

அச்சமூட்டும் `நோரோ `

Ilango Bharathy   / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 19 சிறார்களுக்கு  நோரோ  (Norovirus )வைரஸ் பாதிப்பு இருப்பது கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இவ் வைரஸ் தாக்கத்தினால் வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை உண்டாகலாம் எனவும்,தாக்கம் அதிகமாக இருந்தால், உடலில் நீரிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொதுவாக ஆரோக்கியமானவர்களுக்கு இத் தொற்று ஏற்பட்டாலும் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதன் இணை நோய்களால் தீவிரமாக பாதிக்கப்படலாம் எனவும், கழிவுநீர் மூலம் நோரோ வைரஸ் பரவக்கூடும் என்பதால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை  இதன்  முதல் அறிகுறிகள் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்த்துக் கொள்ளும்படியும், கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .