2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அண்ணாமலையால் பாதுகாப்பு இல்லை -காயத்ரி விலகல்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘அண்ணாமலை தலைமையிலான தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக‘ நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரி  ரகுராம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில்” பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழக  பா.ஜ.கவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கின்றேன்.

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.கவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களைக்  கட்சியில் இருந்து விரட்டுவது மாத்திரமே அண்ணாமலைக்கு ஒரே குறிக்கோளாக உள்ளது. நான் எடுத்த முடிவுக்கு அண்ணாமலையே காரணம்"  இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .