A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
திருப்பூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ராக்கியாபாளையம் பகுதியில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரசார நிகழ்ச்சியில் மனுக்களை பெற்றுக்கொண்ட பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஆட்சி முடியப்போகும் நேரத்தில் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள் மக்களை ஏமாற்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். சொல்லப்பட்ட எந்த திட்டங்களையும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. பொய் சொல்வதில் முதலமைச்சர் பழனிசாமி டொக்டர் பட்டமே கொடுக்கலாம்.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிய திட்டம் இல்லை. கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. டொலர் சிட்டியாக இருந்த திருப்பூர் அதிமுக ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது. ஊழல் திட்டத்துக்கு மாற்று பெயராக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஊழலின் சரணாலய மாக தமிழகத்தை மாற்றியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
15 minute ago
28 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
3 hours ago