A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமேஸ்வரம்:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முஹம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் நேற்று இரவு காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்த இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5அம் திகதி தனது 104ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக முஹம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் சிலநாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வீட்டிலேயே சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானார்.
அவரது மறைவு குறித்த தகவல் கிடைத்ததும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாஸா இன்று பகல் 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
இதில் பலரும் கலந்து கொண்டனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது அண்ணன் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago