Ilango Bharathy / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டிய அரசு சார்பில் 'மராட்டிய பூஷண் விருது' வழங்கும் விழா நேற்று முன்தினம் மும்பை கார்கரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த விழாவில் மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில், லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவ்விழாவினைக் காணச்சென்ற மக்கள் நீண்ட நேரமாக வெயிலில் அமர்ந்திருந்ததால் அவர்களில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சுமார் 123 பேர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும், 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.
59 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
01 May 2026