2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அரைநிர்வாணம் புகைப்படத்தை 50 ரூபாய்க்கு விற்றவர் கைது

Freelancer   / 2023 ஜூலை 18 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரைநிர்வாணம் புகைப்படத்தின் விலை 50ரூபாய், முழு நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய், வீடியோக்கள்  1000 ரூபாய் என பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் விற்பனைச் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 21வயது நிரம்பிய இளம்பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டில், தனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் பணத்துக்கு விற்பனை செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்காக துணி எடுத்தபோது தனக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறைப்பாட்டில் கேட்டுக்கொண்டுள்ளார்.

விசாரணையில் 22 வயதான இளைஞன் சிக்கிக்கொண்டார்.  அவர், ஐடி பி.டெக் படிப்பை முடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X