Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 11 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிரா மும்பையில் சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 25 வயதான பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ள நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.
குழந்தைக்கு மருத்துவர் கண்காணிப்புடன் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். 2 மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு சென்று பால் கொடுங்கள் என தாயிடம் மருத்துவர் கூறியுள்ளார்.
அதன்படி இரவு 11 மணியளவில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க தாய் சென்றுள்ளார். அங்கு பணிபுரிந்த நர்ஸ், அடுத்த நாள் காலை 8 மணிக்கு வாருங்கள் போதும் எனக் கூறியுள்ளார்.
தாதியின் பேச்சு சந்தேகத்தை கிளப்பவே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தான் தனது குழந்தையின் வாயில் டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. குழந்தை அழுது கொண்டே இருப்பது தொந்தரவாக இருந்ததால் சத்தத்தை நிறுத்த இந்த செயலை அந்த தாதி செய்துள்ளார்.
7 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
19 Jul 2025